கொழும்பு அரசியலில் மீண்டும் அதிகாரப்போட்டி! ஜனாதிபதியின் செயற்பாட்டால் குழப்பம்

Report Print Ajith Ajith in அரசியல்
343Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நடைமுறை அரசாங்கத்தின் பணிகளில் தலையீடு செய்யும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இது அவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பாரிய அதிகாரப்போட்டிக்கு வழிவகுக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியமனம் பெற்றுள்ள அமைச்சர்களின் கீழ் வரும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்கும் இறுதிப்பொறுப்பை ஜனாதிபதி தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

இதன்படி அவர் தமது செயலாளர் உதய ஆர். சேனவிரட்னவின் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இந்தக்குழுவே அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டிய நிறுவனத்தலைவர்களின் நியமனங்களை தமது கைகளில் எடுக்கவுள்ளது.

இதன்காரணமாக அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனத் தலைவர்களின் நியமனங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கை குறைக்கும் வகையிலேயே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், பிரதமர் ரணிலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் அவர் இன்னும் அமைதியாகவே இருப்பதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.