நாட்டை ஆட்சி செய்யக் கூடிய உண்மையான தலைவர்கள் ஐ.தே.கவில்

Report Print Steephen Steephen in அரசியல்

யார் என்ன கூறினாலும் நாட்டை ஆட்சி செய்யக் கூடிய உண்மையான தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருப்பதாக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியோ நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்தது, இதுவரை அப்படியான அபிவிருத்தித் திட்டங்களை எந்த அரசாங்கங்களும் செய்யவில்லை.

எதிர்காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று ஆட்சியமைப்பதற்கு தேவையான திட்டங்களை தற்போது வகுத்து வருவதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.