மகிந்தவின் கோரிக்கையை நிறைவேற்றும் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மேலதிக செயலாளர் ஒருவரை நியமித்து தருமாறு மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமைய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மேலதிக செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் என்றும் இல்லாத எதிர்க்கட்சித் தலைவருக்கான மேலதிக செயலாளரை நியமிக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை ரணில் முன்வைக்க உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் சிரேஷ்ட உதவி செயலாளருக்கு உயர் அதிகாரியாக இந்த மேலதிக செயலாளர் நியமிக்கப்பட உள்ளார். மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பணியாளர் குழுவை சேர்ந்த ஒருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.