முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்த 50 நாள் அரசாங்கம் நிறுத்திய கிராம புரட்சி (கம்பெரலிய) அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை இன்று கூடியது.
அமைச்சர்களுக்கான துறைகள் தொடர்பான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்டிருந்த விடயங்கள் சம்பந்தமாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.