அடுத்த சில தினங்களில் அரசியலில் ஏற்பட போகும் மாற்றங்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியை எதிர்கால தலைவர்களிடம் கையளிப்பார் என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கூட்டம் ஒன்றில் நேற்று உரையாற்றும் போதே நளின் பண்டார இதனை கூறியுள்ளார்.

முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும். பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான எந்த அடையாளங்களும் தெரியவில்லை.

அரசாங்கம் எந்தளவுக்கு வலுவாக இருக்கின்றது என்பதை அடுத்த சில நாட்களில் காண முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த எத்தனை பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என்பதையும் காணலாம். 2021 ஆம் ஆண்டே பொதுத் தேர்தல் நடைபெறும்.

யார் என்ன சொன்னாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் எங்களிடம் இருக்கின்றார். ரணில் விக்ரமசிங்க என்பவர் கட்சியை படுபாதாளத்திற்குள் தள்ளும் தலைவர் அல்ல.

கட்சியை எதிர்கால தலைவர்களிடம் கையளித்து விட்டு, எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை அவர் வழிநடத்துவார் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.