பங்களாதேஷ் பிரதமரை வாழ்த்திய மைத்திரி - ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

பங்களாதேஷ் நாட்டின் 11ஆவது பொதுத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ள பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி சிறிசேன, ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவை நேற்று மதியம் 12.45 அளவில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மதியம் ஒரு மணியளவில் ஹசீனாவை தொடர்புகொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ளமை தொடர்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹசீனாவின் எதிர்கால சாதனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.