அரசியல்வாதிகள் நண்பர்களாகி விடுகின்றனர்- மக்கள் பகையாளிகளாக தொடர்கின்றனர்

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் தேர்தல் காலங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் அரசியல் பகையானது நீண்டகால பகையாக மாறி விடுவதாகவும் அவர்கள் உறவு மற்றும் நட்புகளை இழந்து விடுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இறுதியில் அரசியல் தலைவர்கள் அவர்களின் நலன்களுக்காக தேவையானவற்றை செய்துக்கொள்ள உற்ற நண்பர்களாக மாறி விடுகின்றனர்.

எனினும் கிராமத்தில் உள்ளவர்கள் பகையுடன் பிரிந்து, மனஸ்தாபத்தில் உறவுகளையும் நண்பர்களையும் பிரிந்து வாழ்கின்றனர் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் திரப்பனை வண்ணக்குளம் கிராமத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வடிகாலமைப்பு கட்டமைப்பை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.