டி.ஐ.ஜி. நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பில் நாமல் குமார என்ற நபர் பகிரங்கமாக தகவல்களை வெளியிட்டிருந்தார். இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் நடத்தப்பட்ட விசாரணைகளில் ஜனாதிபதியை கொலை செய்வது தொடர்பான சதித்திட்டம் பற்றிய எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Latest Offers