சந்திரிக்காவுடன் சுதந்திரக்கட்சியினர் விசேட பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைவது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் ஹம்பாந்தோட்டை இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பேர் அரசாங்கத்தில் இணைவது அத்தியவசியமானது எனவும் ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வழங்கவில்லை எனிலும் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கத்தில் இணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் கம்பெரலிய திட்டத்தின் ஊடாக தேர்தல் தொகுதிகளுக்கு தலா 300 மில்லியன் ரூபாய் வழங்கினால், அது தாம் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது மகிந்த ராஜபக்சவுடன் இருப்பவர்களுக்கு பிரச்சினையில்லை எனவும் சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் 21 பேர் தமது அரசியல் எதிர்காலம் குறித்து முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தது 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆதரவளிக்க வேண்டும் எனவும் சந்திரிக்கா கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த மற்றுமொரு முக்கியஸ்தர் இணையத்தின் ஊடாக இணைந்துள்ளார். சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.