நாட்டு குடிகளை பிச்சைக்காரர்களாக மாற்றும் ஆட்சியாளர்கள்! வெளிப்படுத்தும் அருட்தந்தை சக்திவேல்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கத்தினரை கடந்த 200 ஆண்டு காலமாக இருட்டிற்குள் தள்ளி பொருளாதார ரீதியில் பிச்சைக்காரர்களாக்குவதே நாட்டை ஆட்சி செய்பவர்களினதும் கம்பனி காரர்களினதும் நோக்கம் என அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையக மக்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் போதாது என்பது இவர்கள் நன்கு அறிந்தவையே ,இதனை தெற்கில் வசிக்கும் சிங்கள தொழிலாளர் வர்க்கம் உணர்ந்திருக்கின்றது .இது தான் மலையக மக்களின் வெற்றியென கருதுகின்றோம்.

இந்த கூற்று அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற மையப்பொருளினை கொண்டது. இது வெற்றி பெற வேண்டுமென்றால் தொழிலாளர் வர்க்கம் வர்க்கமாக ஒன்று சேர வேண்டும்.

நாங்கள் போராட்டத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். குறித்த போராட்டம் எந்த வடிவத்தினை பெற வேண்டும் என்பதினை கம்பனி காரர்களும் ,அரசியல் வாதிகளுமே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.