புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற விடமாட்டோம்! மகிந்த தரப்பினர் திட்டவட்டம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

புதிய அரசியலமைப்பு தேவையா, அல்லது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போது நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், புதிய அரசியலமைப்பு தேவையா, அல்லது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பு மாற்றத்துக்கு, மக்களின் ஆணையை அரசாங்கம் பெற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை. மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காது என்றார்.