சுதந்திரக்கட்சியின் நெருக்கடி: புதிய அதிகாரிகள் சபையை நியமிக்க தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய நிர்வாக சபையை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதற்கு அமைய கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர் சபையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது.

இறுதியாக நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் மோதலில் முடிவடைந்ததுடன் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தொகுதி அமைப்பாளர்களால் தாக்கப்படும் அளவுக்கு பிரச்சினை பெரிதாக காணப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தற்போது மைத்திரி – சந்திரிக்கா அணிகளுக்கு இடையில் கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கைப்பற்றி விடுவார் என்ற பீதியில் அது பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது.