மகிந்தவும் அதைத்தான் கொடுக்க சரி என்றார்! ஏன் கூட்டமைப்பு வாங்கவில்லை?

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் பேரம்பேசும் வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வட மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர்,

இதன்போது மேலும் அவா் கூறுகையில், சமஸ்டி அடிப்படையிலான தீா்வு எனவும், சமஸ்டிக்கான குணாம்சங்களுடன் கூடிய தீா்வு எனவும் கூறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அண்மையில் காலி முகத்திடலில் பேசிய பிரதமா் ரணில் விக்ரமசிங்க ஒற்றையாட்சிக்குள்ளேயே அரசில் தீா்வு காணப்படும் என கூறியிருக்கின்றார்.

அதனை தொடா்ந்து நாடாளுமன்றில் பேசிய அமைச்சா் சம்பிக்க ரணவக்க, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முன்னா் இணங்கியதன் அடிப்படையில் ஒற்றையாட்சிக்குள் தீா்வு காணப்படும் என பேசியுள்ளார். அவரை தொடா்ந்து அமைச்சா் லக்மன் கிரியெல்ல கூறும்போதும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்னா் கண்டியில் பௌத்த மத தலைவா்களை சந்தித்து பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒற்றையாட்சிக்குள் தீா்வு வழங்கப்படும் என கூறியிருக்கின்றார்.

இப்போது ஒற்றையாட்சிக்குள்தான் தீா்வு என்றால் யாரும் இந்த ஆட்சியை கொண்டுவந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. யாரும் இந்த ஆட்சிக்கு தமது ஆதரவினை வழங்கவேண்டிய தேவை இருந்திருக்காது. காரணம் ஒற்றையாட்சிக்குள் தமிழா்களுக்கு தீா்வினை வழங்க இவா்கள் மட்டுமல்ல இதற்கு முன்னரே பலா் தயாராக இருந்தார்கள்.

ஏன் மஹிந்த ராஜபக்ஸவே ஒற்றையாட்சிக்குள் தமிழா்களுக்கு தீா்வினை வழங்க தயாராக இருந்தார். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 1948ம் ஆண்டுக்கு பின்னா் கிடைத்த பேரம்பேசும் சக்தியை சரியாகப் பயன்படுத்தவில்லை. மேலும் தமக்கிருந்த பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி அவா்கள் தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகளுக் கும் கூட தீா்வினை காணவில்லை.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவின் ஊடாக தாம் வாக்குறுதியளித்த விடயங்களை செய்யவேண்டும். அல்லது அரசுக்கு அதரவு வழங்கும் தங்களுடைய நிலைப்பாட்டில் அவா்கள் மாற்றத்தை உண்டாக்கவேண்டும் என அவா் மேலும் கூறியுள்ளார்.