மீண்டும் தேசிய அரசாங்கம்!?

Report Print Steephen Steephen in அரசியல்

மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு அணியாக இணையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் இணைந்து இந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருபவருமான பியசேன கமகே, மீண்டும் தேசிய அரசாங்கம் அமையும். இதன் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என காலி கொஸ்கொட பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.