பந்துல குணவர்தனவின் கருத்துக்கு கல்வி அமைச்சர் கண்டனம்!

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

உயர் தரப் பரீட்சையில் சர்வதேச பாடசாலையொன்றின் மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறித்து பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்தை, கல்வி அமைச்சர் என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிப்பதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார், அவர் மேலும் கூறுகையில்,

தேசிய ,சர்வதேச ரீதியில் அல்லது வேறு ஓர் முறையில் ஒரே பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவியரின் பெறுபேறுகளை வெளியிடும் பொழுது பாடசாலை, இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையில் பெறுபேறுகளை வெளியிடும் முறை ஜனநாயக சமூகங்களிடையே கிடையாது.

பரீட்சை பெறுபேறு வெளியீடு செய்யும் போது பரீட்சை திணைக்களம் இவ்வாறான தவறுகளை இழைக்க முடியாது என்பதனை நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிற்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

பந்துல குணவர்தன கல்வி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இவ்வாறு சர்வதேச பாடசாலைகள் உதாசீனம் செய்யப்பட்டதா என்ற கேள்வி தற்பொழுது எழுகின்றது.

இதேவேளை, பந்துலவின் காலத்தில் அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட சர்வதேச பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குகின்றனர் எனவும் இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றார்கள் எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Latest Offers