கடும் நெருக்கடிக்கு மத்தியில் கட்சி தலைமையகத்திற்கு சாவியுடன் சென்ற மைத்திரி!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது வருட பிறப்பை முன்னிட்டு கட்சிப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கும், கட்சியின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகளை சந்திப்பதற்காகவுமே கட்சி தலைமையகத்துக்கு ஜனாதிபதி சென்றார் எனக் கூறப்படுகின்றது.

அண்மை காலமாக ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கட்சி தலைமையகத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான குழுவொன்று முயற்சிப்பதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி தனிப்பட்ட வியஜமாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கட்சி தலைமையகம் இழுத்துமூடப்பட்டிருந்தது.

அத்துடன், சாவிக்கொத்து மருதானை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தலைமையகம் சென்றிருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.