ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அவிறிப்பு!

Report Print Murali Murali in அரசியல்

பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம், தேசிய மரபுரிமையாக எதிர்வரும் ஐந்தாம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அன்றைய தினம் நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர், தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக இலங்கையின் பௌத்த மக்களால் போற்றி பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கும் தேசிய வைபவம் எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு மாத்தளை அலுவிஹாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

அன்றைய நாளில் நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.

Latest Offers