விரைவில் வெளியாகவுள்ள மற்றுமொரு அரச வர்த்தமானி!

Report Print Murali Murali in அரசியல்

அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் கடமைகள் தொடர்பில் புதிய வர்த்தமானி விரைவில் வெளியாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரிந்துரைகளுடன் புதிய வர்த்தமானி வெளியிடப்படும்.

புதிய வர்த்தமானியை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளதாக” மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவையின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை ஒதுக்கீடு செய்வதற்காக கடந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.