மஹிந்த ராஜபக்சவின் ஜோதிடருக்கு 82 லட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம்

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமக்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய அரச உடமையான மிஹின்லங்கா நிறுவனம் பணம் செலுத்தியதாக மஹிந்த ராஜபக்சவின் ஜோதிடரான சுமணதாஸ அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆணைக்குழு முன்னியிலையில் சுமணதாஸ இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

எல்ஓஎல்சியில் இருந்து 82 லட்சம் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஆலோசகர் நெவில் வன்னியாராச்சி தமக்கு தொலைபேசி மூலம் அறிவித்தார்.

இதன்படி தாம் எல்ஓஎல்சிக்கு சென்றபோது அங்கு தமக்கு வாகனம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான பணத்தை பின்னர் மிஹின் லங்கா செலுத்தியதாகவும் சுமணதாஸ சாட்சியமளித்துள்ளார்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வி கண்ட பின்னர் தாம் 2015ஆம் ஆண்டு குறித்த வாகனத்தை மீண்டும் கையளித்துவிட்டதாகவும் சுமணதாஸ குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers