பழைய முறையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும்

Report Print Kamel Kamel in அரசியல்

பழைய முறையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டுமாயின் தற்பொழுது உள்ள சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, பழைய முறையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் நேற்றைய தினம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இதனை பிரதமருக்கு அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers