வீடு வீடாக சென்று அம்பலப்படுத்துவோம்! மிரட்டும் மஹிந்த

Report Print Vethu Vethu in அரசியல்

சமகால அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக வீடு வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று தனது தனிப்பட்ட அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளர்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

இந்த வருடம் தேர்தல் வருடமாகும். இந்த அரசாங்கம் விமான நிலையம், துறைமுகம், வங்கி போன்று நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு ஆயத்தங்கள் மேற்கொண்டு வருகின்றது. பெடரல் அரசியலமைப்பு கொண்டு வருவதற்கு ஆயத்தம் ஒன்று உள்ளது.

இன்று ரணில் விக்ரமசிங்க பொய் கூறுகின்றார். நாங்கள் 8 பில்லியன் ரூபா பணம் செலவு செய்ததாக ரணில் குறிப்பிட்டார்.

எனினும் செலவு செய்வதற்கு ஒரு பில்லியனேனும் பணம் காணப்படவில்லை. வரலாற்றில் முதல் முறையாக ஊடங்களின் பெயர்களை நாடாளுமன்றத்தில் கூறி ரணில் தாக்குதல் மேற்கொள்கின்றார்.

இந்த அரசாங்கத்தின் அடக்குமுறையை மக்களுக்கு வெளிப்படுத்துவோம். ரணில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக வீடு வீடாக சென்று சரி மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers