மஹிந்தவுடன் இணைந்து மைத்திரி போடும் திட்டம்! அடுத்து வரும் நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்

Report Print Vethu Vethu in அரசியல்

2020ம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சமகால ஜனாதிபதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அரசியலமைப்புக்கு அமைய, எதிர்வரும் 9ம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு தினத்திலும் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முடியும். இதன் காரணமான விரைவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவும் மைத்திரிக்கு கிடைக்கவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலின் தனக்கு பலமான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்குடன், மைத்திரி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரை உடனடியாக மாற்றியமை, மாகாணங்களுக்கு தனது ஆதரவாளர்களை ஆளுனர்களாக நியமித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Latest Offers