பிரச்சினைகள் இருந்தாலும் எவரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள்: ஐ.தே.க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அவர்கள் எவரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள் என பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு விரிவான கூட்டணியின் கீழ் அடுத்த தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று நாட்டுக்கு வளமான அபிவிருத்தியை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers