சந்திரிக்கா குறித்து தயாசிறி வெளியிட்ட கருத்து

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய கட்சியை ஆரம்பிக்க தயாராகி வருவது குறித்து தான் கவனம் செலுத்தவில்லை எனவும், அவர் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் எனவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன எனவும், அந்த பிரச்சினைகளை தான் புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், தயாசிறி ஜயசேகர அப்படியான கருத்துக்களை வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

Latest Offers