வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ஹரிஷன்

Report Print Yathu in அரசியல்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அமைச்சர் ஹரிஷன் இன்று விஜயம் செய்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது அவர் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அத்துடன் பாதிப்புக்குள்ளான விவசாய பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers