ஆளுநர் பதவி ஜனாதிபதி எனக்கு வழங்கிய பரிசு: அசாத் சாலி

Report Print Steephen Steephen in அரசியல்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் அவருடன் தொடர்ந்தும் பணியாற்றியமைக்கான பரிசாக ஜனாதிபதி, மேல் மாகாண ஆளுநர் பதவியை தனக்கு வழங்கியுள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநராக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அசாத் சாலி இதனை கூறியுள்ளார்.

எனது அரசியல் வாழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி என்னை இரண்டு முறை ஏமாற்றியது. இந்த ஆளுநர் பதவியின் மூலம் மேல் மாகாணத்தில் மாற்றத்தை செய்து காட்டுவேன் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

5 மாகாணங்களுக்கு புதிய ஆளுநரை நியமித்த ஜனாதிபதி அடுத்த சில தினங்களில் ஏனைய 4 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க உள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers