இலங்கையின் ஊடகங்களை முற்றாக மறுசீரமைப்பது அவசியம்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையின் ஊடகங்களை முற்றாக மறுசீரமைப்பது அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுய கட்டுப்பாடு செய்ய ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ள போதிலும், சில ஊடகங்கள் அரசியல் தேவைகளுக்கு அமைய மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதாகவும், வருத்தத்துடன் இதனை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு கூடிய பிரச்சாரங்களை பெற்றுக்கொள்ளும் விதத்திலேயே அரச விளம்பரங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படும்.

இதற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

சில ஊடகங்களுக்கு அரச விளம்பரங்களை வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர சுமத்தியிருந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers