நல்லதை சொல்லி ஆபத்து குறித்து எச்சரித்த மகிந்த ராஜபக்ச

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தேர்தல் வருவதனால் வரவுசெலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைக்கும் என்று எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொட்டியாக்கும்புர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

நாட்டில் அடுத்தடுத்து பல தேர்தல்கள் வரவுள்ளன. இதனால் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பல பொருட்களின் விலைகள் குறையும். ஆனால், தேர்தல்கள் முடிந்த பின்னர் மீண்டும் பொருட்களின் விலை ஏறும்.

நாட்டு மக்களின் மீது பல சுமைகளை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்படும் என்றும் எச்சரித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தாமதமாகியுள்ள ஏனைய தேர்தல்களை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest Offers