கரைச்சி பிரதேச சபைக்கு கொள்வனவு செய்யப்பட்ட துப்பாக்கிகள்!

Report Print Yathu in அரசியல்

கரைச்சி பிரதேச சபைக்கு இரண்டு துப்பாக்கிகள் இன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபை தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சபை அமர்வில் வன்னேரிக்குளம் வட்டார உறுப்பினர் செல்வநாயகம் குரங்குத் தொல்லையிலிருந்து மக்களையும் விவசாயிகளையும் பாதுகாத்தல் என்ற பிரேரணையின் அடிப்படையில் துப்பாக்கிகளை கொள்வனவு செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் இருபத்தியொரு வட்டாரங்களிலும் குரங்குக் கூட்டத்தின் படையெடுப்பு காரணமாக விவசாய உற்பத்திகள் பயன்தரு மரங்கள் பெருமளவில் சேதமடைந்து வருகிறது.

இந்நிலையில் இதனை தடுத்து நிறுத்துமாறு பல்வேறுபட்ட தரப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக முதற்கட்டமாக இரண்டு துப்பாக்கிகள் இன்று இரண்டு இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டது.

இத் துப்பாக்கிகளை பயன்படுத்தி புகைக்குண்டுகளை ஏவுவதன் மூலமாக குரங்குகளை வனங்களை நோக்கி கலைத்து விடுகின்ற செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

Latest Offers