8ஆம் திகதியின் பின்னர் புது அவதாரம் எடுக்கும் மஹிந்த! முதல் நடவடிக்கை இதுதானாம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

சபாநாயகர் கருஜயசூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்கிழமை நாடாளுமன்ற அமர்வின்போது மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசனத்திலும் அமர்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சி காரியாலயம் மற்றும் எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றையும் ஒப்படைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே 8ஆம் திகதியிலிருந்து எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கட்சியாக எமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

அதன்பின்னர் நடைபெற வேண்டிய தேர்தல்களை உரிய காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers