இலங்கையை தவறாக சித்தரிக்கிறார்கள்: தவறான காரியத்தை கைவிடுவது சிறப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கையில் உள்ளவர்களை மிலேச்சத்தனமானவர்களாக சர்வதேசத்தில் காட்டுவதற்கான முயற்சிகளை சிலர் எடுக்கின்றனர் என கொழும்பு பேராயர், மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பானகல உபதிஸ்ஸ தேரின் 69 ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர்,

இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு தலையீடு அவசியமற்றது. நாட்டில் பல மதத்தவர்களும் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் நாட்டில் ஏற்படும் சிறு சிறு சம்பவங்களை சர்வதேசத்தில் பெரிதாக காட்டுவதற்கு எடுக்கும் முயற்சி தவிர்க்கப்படல் வேண்டும்.

ஒரு மரத்துக்கு இலங்கையை ஒப்பிட்டால், மரத்தின் தண்டுப் பகுதி தான் பௌத்த மதம். ஏனைய கிளைகள் தான் ஏனைய சமயத்தினர்.

நாம் அழகிய மரமொன்றைப் போன்று இந்நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். எமது விடயங்களை நாமே பேசித் தீர்த்துக் கொள்கின்றோம்.

சிலர் இந்நாட்டிலுள்ளவர்களை மிலேச்சத்தனமானவர்களாக சர்வதேசத்தில் காட்டுவதற்கு முயற்சி எடுக்கின்றனர். அவர்கள் சர்வதேச மத்தியஸ்தத்தை கோருகின்றனர் என்னறார்.

Latest Offers