ஊடகங்களுக்கு இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கொடுக்கும் ஒரு வாய்ப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

அரசாங்கத்தை விமர்சிக்கும் போக்கை கைவிட்டால் ஊடகங்களுக்கு அரச விளம்பரங்களை வழங்குவதில் எந்தவித சிக்கலும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களுக்கு அரச விளம்பரங்களை வழங்காதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தன்னைக் கண்மூடித்தனமாக ஏசும் ஒருவருக்கு உதவ யாரும் முன்வருவதில்லை. இதேபோன்றுதான் அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் ஊடகங்களுக்கு எவ்வாறு அரசாங்கம் விளம்பரங்களை வழங்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Latest Offers