மீண்டும் மஹிந்தவை பிரதமராக்கும் தீவிர முயற்சியில் மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் போராட்டத்தை தான் இன்னமும் கைவிடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்காக வலுவான முன்னணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் போராடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியினர் பிரிந்து சென்று, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்னறை உருவாக்குவதற்கு நான் இடமளிக்கப்போவதில்லை. அதற்கு பதிலாக வலுவான முன்னணி மூலம் எங்கள் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு செயற்படுவேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகம் என்பது எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் தலைமையகமாக மாறியுள்ளது. பல்வேறு நபர்கள் எனக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளதுள்ளார்கள்.

நான் தான் கட்சி தலைவர் என்பதனை பலர் மறந்து விட்டனர் என ஜனாதிபதி தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers