நெருக்கடியான நிலையில் சந்திரிக்கா! மைத்திரி எடுக்கும் தீவிர நடவடிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வகிக்கும் பதவிகளை பறிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் கிடைக்கின்றன.

சந்திரிக்காவின் அழுத்தம் காரணமாக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் உப செயலாளரும் மேல் மாகாண சபை முதலமைச்சருமான இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்த நிலையில், அவருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர புதிய செயலாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாகவே, ரோஹன லக்ஷ்மன் பியதாஸ பதவியை ராஜினாமா செய்திருந்தார் என இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தொடர்பில் சந்திரிக்கா தொடர்ந்து விமர்சித்து பேசினார். அதே போன்று விமர்சித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இவ்வாறான சம்பவங்களினால் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டதென இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கு ஏற்ப செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் எதிர்வரும் நாட்களில் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவி மற்றும் ஆலோசகர் பதவி தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிக்காவின் தலைமையில் ராஜித சேனாரத்னவின் ஆசிர்வாதத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வழிநடத்தலில் தான் இந்த குழுவினர் செயற்படுகின்றனர்.

இது தொடர்பிலான தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறான நிலைமையினுள் சந்திரிக்கா எங்கள் கட்சியின் ஆலோசகராக செயற்பட பொருத்தமானவர் என நாங்கள் நினைக்கவில்லை. அவர் குறித்து தீர்மானம் ஒன்று எடுக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையான தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சந்திரிக்கா செயற்பட்டு வர முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers