ஆளுநர்களின் நியமனம்! ஜனாதிபதியின் செயல் குறித்து சந்தேகம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐந்து மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனங்கள் காரணமாக சுதந்திரமான தேர்தல்களை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிழக்கு அரசியலில் தீவிரமாக செயற்பட்டு வந்த ஹிஸ்புல்லாஹ் அந்த மாகாணத்தின்ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த அசாத் சாலி மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சரத் ஏக்கநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேசல ஜெயரட்ன, வடமத்திய மாகாணத்தில் செல்வாக்கை கொண்டவராவார்.

இந்த நிலையில் அரசியலில் அதுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பானவர்கள் மாத்திரம் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.

Latest Offers