1990ஆம் ஆண்டு காலங்களில்... கூட்டமைப்பின் முக்கியஸ்தர் தெரிவிக்கும் விடயம்

Report Print Nesan Nesan in அரசியல்

தடைகளை உடைத்தெறிந்து சாதனைகளை புரிந்தவர்கள் கிராமப்புற மாணவர்களே என தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று எருவில் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் சமூகத்தின் இருப்பிற்கான சொத்து கல்வி. கல்வியில் சாதனைகள், வெற்றிகள் என்பவற்றை கடக்க வறுமை என்பது ஒரு தடையல்ல.

எமது முன்னோடிகள் கல்வியின் மூலமே தமிழ் சமூகத்தின் ஸ்திர தன்மையை காலுன்ற செய்துள்ளனர்.

கல்வியில் இப்பொழுது அதி கஸ்ர பிரதேச மாணவர்களே அதிகமான சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நரிப்புல் தோட்டம், அம்பாறை 15ஆம் கிராமம் போன்ற பிரதேசங்களில் இருந்து சாதனைகளை நிகழ்த்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் மூலம் அறிய முடிகின்றது.

1990ஆம் ஆண்டு காலங்களில் அப்போதைய ஆயுதகுழுக்களின் கெடுபிடிகள், வறுமை என பல போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் தங்களை உருக்கி பிள்ளைகளை சிற்பங்களாக வடித்துள்ளனர்.

இதில் பல தாய்மார்களின் அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை விபரிக்க வார்த்தைகள் இல்லை.

இவ்வாறான சம்பவங்கள் மட்டு. மாவட்டத்தின் பல பின்தங்கிய கிராமங்களில் நாம் கண்கூடாக கண்ட விடயங்கள்.

இன்றைய சூழ்நிலை இவ்வாறானதல்ல பல சமூக சேவையாளர்கள், வெளிநாடு வாழ் கிராமவாசிகள் குழுக்களாக இணைந்து தாமாகவே மனமுவர்ந்து கல்விக்கான ஊக்கங்களை செய்வது மாணவர்களது வெற்றிகளுக்கு படிக்கட்டுகளாக அமையும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி கிராமத்தின் அவாவான வைத்தியதுறைக்கு செல்ல கூடிய சரியான மாணவர்களை அடயாளம் காண புத்திஜீவகள், ஆசிரியர்கள் துணைபுரிய வேண்டும் என கூறியுள்ளார்.

Latest Offers