தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்த தயாராகும் சந்திரிக்கா! குழப்பத்தில் மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.

அவ்வாறு வந்து அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்காக ஆதரவு வழங்குவார் என்றால் தான் அதனை விருப்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் நல்லாட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்காக பாரிய ஆதரவு வழங்கியவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திரிக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 18 பேர் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்குவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணிலுடன் மிகவும் நெருக்கமான அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியல் நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் சந்திரிக்காவின் மீள்வருகை என்பது அவருக்கு மிகவும் சவால் மிகுந்ததாக காணப்படும் என்பதால், அச்ச நிலையில் அவர் உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest Offers