ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு பிரதமர் ரணில் வரவேற்பு!

Report Print Steephen Steephen in அரசியல்

அரச பங்குகளை கொண்ட நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைய நியமிக்குமாறும் ஜனாதிபதி இந்த நடவடிக்கை சிறந்த நடவடிக்கை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஐக்கிய கூட்டணி அரசாங்கத்தின் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்க குழுவொன்றை நியமித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டார்.

ஜனாதிபதியின் இரண்டு பிரதிநிதிகள், பிரதமரின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சின் ஒரு பிரதிநிதி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அரச நிறுவனங்களுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பில் குழு ஒன்றை நியமித்து, சுற்று நிருபத்தை வெளியிட்டமையானது ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானம் என பிரதமர், கூறியுள்ளார். சகல அமைச்சர்களும் இதற்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers