பொலன்நறுவை தொகுதியின் அமைப்பாளராக மைத்திரியின் மகள் சத்துரிக்கா?

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை தொகுதியின் அமைப்பாளராக சத்துரிக்கா சிறிசேனவையும் மெதிரிகிரிய தொகுதியின் அமைப்பாளராக டட்லி சிறிசேனவையும் நியமிக்க அந்த கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் இருவரும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்த போதிலும் தன்னை தவிர தனது குடும்பத்தை சேர்ந்த எவரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் எனவும் ஈடுபடுத்த போவதில்லை எனவும் ஜனாதிபதி இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

குடும்ப அரசியலை நிராகரிப்பதாக கூறியிருந்த ஜனாதிபதி, தனது பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்த போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்திருந்த ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன, தனது அண்ணன் தனக்கு தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்குவார் என்று எதிர்பார்க்க முடியாது எனக் கூறியிருந்தார்.

Latest Offers