எந்த கூட்டணியாக இருந்தாலும் சின்னம் தாமரை மொட்டு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த தேர்தல்களில் போட்டியிட எப்படியான விரிவான கூட்டணி அமைக்கப்பட்டாலும் அந்த கூட்டணியின் சின்னம் தாமரை மொட்டுச் சின்னமாகவே இருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் ஒன்றியத்தின் தலைவர் உதேனி அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள பிரபலமான அரசியல்கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. நாட்டில் அழிந்து வந்த அரசியலுக்கு சரியான பதிலை வழங்கிய கட்சி என்ற வகையில், அதனை தவிர்த்து செயற்பட இடமளிக்க முடியாது.

மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்சியை எந்த அரசியல்கட்சியிடமோ அல்லது அணியிடமோ காட்டிக்கொடுக்க தயாரில்லை.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்து வெளியேறிய போது அவருடன் இருந்தவர்கள், எதிர்காலத்திலும் அவருடன் இருந்து அவரது தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுவாக கட்டியெழுப்புவோம் எனவும் உதேனி அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers