வரவு செலவுத்திட்டத்தின் போது சுதந்திரக்கட்சியின் 20 பேர் அரசாங்கத்தில்

Report Print Steephen Steephen in அரசியல்

வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களித்து, அதனை நிறைவேற்ற உதவி செய்வார்கள்.

ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் அனைவரையும் புரிந்துக்கொண்டோம். ஐக்கிய தேசியக் கட்சி மெதுவாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளும் எனவும் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers