மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்பட வேண்டும்: யோகேஸ்வரன் எம்.பி

Report Print Navoj in அரசியல்

எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும். எங்கள் மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 148வது மாதிரிக் கிராமமான பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழாவில் உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போலியான பிரதமரை நியமித்து பாராளுமன்றத்தை குழப்பி பெரும் அடாவடித் தனங்களை செய்தார்கள். போலியான பிரதமரை நியமித்தும் எமது பல பகுதிகளில் பல பதாதைகள் வைக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக கலாசார நிலையங்களை கலாசார அமைச்சர் என்கிற வகையில் அமைத்து தருமாறு இந்த இடத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.உதயகுமார், வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்ஜித், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, சில பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஐக்கிய தேசியகட்சியின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers