மகிந்தவின் முடிவிற்காக காத்திருக்கும் உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே விலகி விட்டதாகவும் தற்போது தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சிகள் உட்பட 29 அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவதை என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானிப்பார்.

கோத்தபாய ராஜபக்சவா அல்லது வேறு ஒருவரா என்பதை மகிந்தவே முடிவு செய்வார் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers