சந்திரிகாவிற்கு மூளையில் ஏற்பட்டுள்ள கோளாறு! மிக மோசமாக விமர்சித்துள்ள திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து சூழ்ச்சியில் ஈடுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை கட்சியில் இருந்து விரட்டப் போவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு மூளையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தற்போது பல்வேறு கதைகளை பேசி வருகிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இணைந்து வரலாற்றில் மிகப் பெரிய கூட்டணி அடுத்த சில தினங்களில் உருவாக்கப்படும். இதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எஸ்.பி. திஸாநாயக்க, இதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை மிக மோசமான முறையில் விமர்சித்துள்ளார்.

Latest Offers