மைத்திரி செய்த துரோகம்! மகிந்தவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உறுப்பினர்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கூட்டணி அமைத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது மீண்டும் இரண்டாவது அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. முறையான தலைமைத்துவம் இன்மையே இதற்கு காரணமாகும். 2015ஆம் ஆண்டு மைத்திரி செய்த துரோகமே இன்று பொது ஜன பெரமுன முன்னணி தோன்ற காரணமாகும்.

இந்நிலையில், மைத்திரி - மகிந்த தரப்பினர் கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருகின்றனர். இரண்டு தரப்பினரும் புதிய கூட்டணி ஒன்று அமைக்கும் போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியினர் ஒருபோதும் தங்களின் தலைமைத்துவத்தினையும், கட்சியின் சின்னத்தினையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இதன் காரணமாக வீண் முரண்பாடுகளே ஏற்படும்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கூட்டணி அமைத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது.

இது மீண்டும் இரண்டாவது அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்தும் என குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers