கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட மைத்திரி!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பொருத்தமில்லாத ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் பதவியை சொச்சைப்படுத்தியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும் கெளரவமான பதவியாக மதிக்கப்படவேண்டியதொன்றாகும். அந்த நியமினங்கள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி சார்பற்ற கெளரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்படவேண்டும்.

ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் என்ற பதவியையும் அகெளரவப்படுத்தி, இவ்வாறானவர்களை நியமித்து அவரும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers