இந்த ஒரு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்தது!

Report Print Navoj in அரசியல்

இந்த நாட்டில் காட்டாச்சி வரக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

கும்புறுமூலை கிராமத்தில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயகத்தை வெல்ல வைக்க வேண்டும், அரசியல் யாப்பை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருந்தனர்.

இந்த நாட்டில் காட்டாச்சி வரக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்தது என்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து தர தாங்கள் முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில், அமைச்சர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.உதயகுமார், வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்ஜித், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, சில பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers