கிழக்கு மாகாணம் மாற்று இனத்திற்கு செல்வதற்கு த.தே.கூட்டமைப்பே காரணம்!

Report Print Kumar in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியலே இன்று கிழக்கு மாகாணம் மாற்று இனத்திற்கு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு, வவுணதீவில் நேற்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழினத்தின் உரிமைக்காக குரல்கொடுத்த அமரர் குமார் பொன்னம்பலம், கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி தலைநகர் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றது.

இன்று கிழக்கு மாகாணம் தமிழ் மக்களிடம் இருந்து முற்றாக இல்லாமல் செய்யும் நிலையுருவாகியுள்ளது.

இதற்கான முழுப்பொறுப்பினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள் செய்துவரும் இணக்க ஆட்சியே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers