எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வடக்கிற்கு படையெடுத்த தென்னிலங்கை அரசியல் பிரபலம்

Report Print Dias Dias in அரசியல்

வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வெள்ளம் அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறிப்பாக எனது அமைச்சின் கீழ் வருகின்ற விவசாயம், நீர்பாசனம், கமநல சேவைகள், மீன்பிடி போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்திற் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஆனால் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நாட்டில் இல்லாததன் காரணமாக தனது செயலாளரை அனுப்பியிருக்கின்றார். மற்றும் அமைச்சர் றிசாட் பதியூதீன் சுகயீனம் காரணமாக வரவில்லை தனது பிரதேச சபை தவிசாளர் ஒருவரை அனுப்பியிருக்கின்றார். ஏனைய எவரும் கலந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர் பி. ஹரிஸன் தெரிவித்தார்.

எனினும் தான் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்கின்றமை தொடர்பில் வடக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவருக்கும் எந்தவொரு முன்னறிவித்தலையும் வழங்காது இந்த விஜயம் தொடர்பான தகவல்கள் எதனையும் பகிர்ந்து கொள்ளாமல் திடீரென அமைச்சர் ஹரிசன் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers