நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கொண்டுள்ள அதீத நம்பிக்கை

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதை தாம் நம்புவதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகா நாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகா நாயக்கர்களை சந்திப்பது இதுவே முதற்தடவையாகும்.

Latest Offers